தமிழக செய்திகள்

திருமங்கலம் அருகே கண்மாயில் ராகு-கேது சிலைகள் கண்டெடுப்பு

திருமங்கலம் அருகே கண்மாயில் ராகு-கேது சிலைகள் கண்டெடுக்கப்பட்டது.

தினத்தந்தி

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் சிந்துபட்டி அருகே செம்பட்டி கிராமத்தில் கண்மாய் உள்ளது. தற்போது மழை காலம் என்பதால் கண்மாயில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. இதில் அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் குளித்தனர். குளித்துக் கொண்டிருந்த சிறுவர்களின் காலில் கல் சிலை தட்டுப்பட்டது. சிறுவர்களும் அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களும் கல்லை வெளியே தூக்கி பார்த்தனர். அந்த கல் சிலை போல் தெரிந்தது. தொடர்ந்து அந்த கல்லை சுத்தம் செய்து பார்த்தபோது அது பழங்காலத்தை சேர்ந்த ராகு-கேது சிலை என தெரியவந்தது.

இதுகுறித்து செம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கவுசல்யாவிடம் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். கிராம நிர்வாக அலுவலர் சிந்துபட்டி போலீசில் தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சிந்துபட்டி போலீசார் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பொதுமக்களும் சேர்ந்து சிலையை. கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்து உள்ளனர். இதுகுறித்து சிந்துபட்டி போலீசார் கூறுகையில் தொல்பொருள் ஆய்வாளர்களுக்கு தான் இந்த சிலை குறித்த விவரங்கள் தெரியவரும் என்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்