தமிழக செய்திகள்

தேர்தல் பிரசாரத்தில் இழிவான கருத்து: திண்டுக்கல் லியோனி மீது வழக்குப்பதிவு

தேர்தல் பிரசாரத்தில் இழிவான கருத்து: திண்டுக்கல் லியோனி மீது வழக்குப்பதிவு.

தினத்தந்தி

சென்னை,

அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் பிரிவு நிர்வாகிகள் அதிசயா மற்றும் ராஜலட்சுமி ஆகியோர் இணைந்து தமிழக தலைமை தேர்தல் ஆணையரிடம் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த புகாரில், தேர்தல் பிரசாரத்தின் போது, பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி, முன்னாள் அமைச்சர் வளர்மதி பற்றி இழிவாக பேசியுள்ளார் என்றும், முன்னாள் மத்திய மந்திரியும், தி.மு.க. எம்.பி.யுமான தயாநிதி மாறன் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பற்றியும், பிரதமர் நரேந்திர மோடி பற்றியும் இழிவாக பேசியுள்ளார் என்றும், அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த புகார் மனு அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 2 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னாள் மத்திய மந்திரியும், தி.மு.க. எம்.பி.யுமான ஆ.ராசா மீது ஏற்கனவே சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மேலும் ஒரு வழக்கு அவர் மீது புதிதாக பதிவு செய்யப்பட்டது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்