தமிழக செய்திகள்

ஆடல்-பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்ட மனுக்கள் தள்ளுபடி

ஆடல்-பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்ட மனுக்கள் தள்ளுபடி செய்து மதுர ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

தினத்தந்தி

மதுரை,

மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கோவில் திருவிழாக்களையொட்டி, ஆடல்-பாடல், கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கேட்டு மதுரை ஐகோர்ட்டில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதி தாரணி முன்பு விசாரணைக்கு வந்தன.

அப்போது நீதிபதி, "கோவில் திருவிழாக்கள் வழக்கம் போல் நடைபெறலாம். ஆனால் ஆடல்-பாடல், கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி தர இயலாது. அதே நேரத்தில், ஆடல்-பாடல், கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கோரிய மனுக்கள் மீதான விசாரணையை தள்ளிப்போடுவதற்கு விரும்புபவர்கள் வாய்தா பெற்றுக்கொள்ளலாம்" என்று அவகாசம் வழங்கினார். ஆனால், பெரும்பாலானவர்கள் வாய்தா பெற விரும்பாததால் அவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்