தமிழக செய்திகள்

ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரிய மனு தள்ளுபடி

ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரிய மனு தள்ளுபடி -ஐகோர்ட்டு உத்தரவு.

தினத்தந்தி

சென்னை,

சென்னை துரைப்பாக்கத்தில் 8 கிரவுண்ட் நிலம் தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகன் நவீன்குமாருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமாருக்கும் பிரச்சினை இருந்து வந்தது.

அமைச்சராக இருந்த ஜெயக்குமார், தன் பதவியின் அதிகாரத்தை பயன்படுத்தி இந்த நிலத்தை தனது மருமகனுக்கு சாதகமாக அடியாட்கள் மூலமாக மிரட்டி அபகரித்துக் கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் போலீசில் மகேஷ்குமார் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஜெயக்குமார், அவரது மகள் ஜெயப்பிரியா, மருமகன் நவீன்குமார் ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஜெயக்குமாரை கைதும் செய்தனர். இந்த வழக்கில் அவர் ஜாமீனில் வெளியில் வந்தார்.

இந்தநிலையில் தனது புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி மகேஷ்குமாரிடம் ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டும், தன்னைப் பற்றி அவதூறு கருத்துகளை தெரிவிக்க அவருக்கு தடை விதிக்க கோரியும் சென்னை ஐகோர்ட்டில் ஜெயக்குமார் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நிராகரிக்க கோரி மகேஷ்குமார் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.குமரேஷ்பாபு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து