தமிழக செய்திகள்

கூடுதலாக சாம்பார் கேட்டு தகராறு: ஓட்டல் சூப்பர்வைசர் கொலை - தந்தை மகன் வெறிச்செயல்

கூடுதலாக சாம்பார் கேட்டு ஏற்பட்ட தகராறில் ஓட்டல் சூப்பர்வைசரை தந்தை, மகன் கொலை செய்தனர்.

தினத்தந்தி

சென்னை,

சென்னையை அடுத்த பம்மல் பிரதான சாலையில் பிரபல தனியார் சைவ உணவகம் உள்ளது இந்த உணவகத்தில் தஞ்சாவூரை சேர்ந்த அருண் (வயது 30) என்பவர் சூப்பர்வைசராக பணி செய்து வந்தார். நேற்று இரவு மது போதையில் வந்த இருவர் இட்லி பார்சல் வாங்குவதில் கூடுதலாக சாம்பார் சட்னி கேட்டு தகராறு செய்துள்ளனர்.

அவர்களை சமாதானம் செய்து கூடுதல் சட்னி சாம்பார் கொடுத்து அருண் அனுப்பியுள்ளார். அங்கிருந்து கிளம்பிய இருவரும் உணவகத்தின் வெளியே இருந்த வாகன நிறுத்தத்தில் இருந்து தங்களது இரு சக்கர வாகனத்தை எடுக்கும்போது உணவகத்தின் காவலாளியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மீண்டும் அங்கு வந்த சூப்பர்வைசர் அருண் அவர்கள் இருவரையும் சமாதானம் செய்துள்ளார்.

அப்போது ஆத்திரம் அடைந்த வாடிக்கையாளர்கள் இருவரும் சூப்பர்வைசர் அருணை கையால் சரமாரியாக தாக்கியுள்ளனர் இதில் மயங்கி விழுந்த அருணை சக ஊழியர்கள் மீட்டு குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு பரிசோதித்ததில் அருண் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அனகாபுத்தூர் பாரி நகரைசேர்ந்த சங்கர்( வயது 55 ) அவரது மகன் அருண்குமார் ( 30)இருவரும் மதுபோதையில் அருணை தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து தந்தை மகன் இருவரையும் சங்கர்நகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து