தமிழக செய்திகள்

கோவில் கும்பாபிஷேக பணிக்கு இடையூறு

விழுப்புரம் அருகே கோவில் கும்பாபிஷேக பணிக்கு இடையூறு கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

தினத்தந்தி

விழுப்புரம்

விழுப்புரம் அருகே மழையாம்பட்டு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மக்கள் நல முன்னேற்ற சங்கத்தின் தலைவர் திருநீலகண்டன் தலைமையில் மாவட்ட கலெக்டர் மோகனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், எங்கள் ஊர் மாரியம்மன், ராமர் மற்றும் விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவை வருகிற செப்டம்பர் மாதம் நடத்த முடிவு செய்துள்ளோம். இதற்கான முன்னேற்பாடு பணிகளை தொடங்கியபோது தனிநபர் ஒருவர் கோவிலுக்கு செல்லும் பாதையில் தான் கிரையம் வாங்கிவிட்டதாக கூறிவருகிறார். அதற்கான பத்திரம் மற்றும் ஆவணங்களை கேட்டபோது அவர் காண்பிக்கவில்லை. எனவே இது குறித்து நேரில் ஆய்வு செய்து பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கும்பாபிஷேகம் தடையில்லாமல் நடைபெற நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து