தமிழக செய்திகள்

தொலைதூரக்கல்வி மாணவர்கள் செமஸ்டர் தேர்வு எழுத 21-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

தொலைதூரக்கல்வி மாணவர்கள் செமஸ்டர் தேர்வு எழுத 21-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

சென்னை,

சென்னை பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் கே.பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்வியில் இளங்கலை, முதுகலை, பி.லிஸ் மற்றும் எம்.லிஸ் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ சான்றிதழ் படிப்புக்கான ஜூன் 2020 செமஸ்டர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் இதற்கான விண்ணப்பங்கள் கிடைக்கின்றன. 7-ந்தேதி (இன்று) முதல் வருகிற 21-ந்தேதி வரை அபராதம் இல்லாமலும், 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை அபராதத்துடனும் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்