தமிழக செய்திகள்

ரேஷன் கடைகளில் ஆகஸ்டு 5-ந்தேதி முதல் முககவசம் வினியோகம் - அமைச்சர் காமராஜ் தகவல்

ரேஷன் கடைகளில் ஆகஸ்டு 5-ந்தேதி முதல் முககவசம் வினியோகம் செய்யப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை டிரஸ்ட்புரத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமினை ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு முககவசம், கபசுர குடிநீர் ஆகியவற்றை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் ஆர்.காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக முககவசம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்திருக்கிறார். அதையடுத்து முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி ஆகஸ்டு 1, 3 மற்றும் 4-ந்தேதிகளில் இலவச முககவசம் பெறுவதற்காக வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கப்படும்.

மேலும் ரேஷன் கடைகளில் ஆகஸ்ட் 5-ந்தேதி முதல் அத்தியாவசிய பொருட்கள் உடன் இலவச முககவசங்களையும் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து