தமிழக செய்திகள்

எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டோருக்கு பொங்கல் பரிசு வழங்கல்

எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டோருக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.

தினத்தந்தி

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் சினேகம் கிங்ஸ் லயன் சங்கம், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டோர் நலச்சங்கம் சார்பில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டோருக்கு பொங்கல் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஸ்ரீ கண்ணன் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளரும், சங்க தலைவருமான நந்தகுமார் தலைமை தாங்கினார். சாசன தலைவர் பொறியாளர் ராசிபில்டர்ஸ் சிவக்குமார், துணைத் தலைவர் சரவணகுமார், செயலாளர்கள் கலியராஜ், அன்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன், அரசு மருத்துவர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டு எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினர். இதில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பிரிவு மாவட்ட திட்டம் மேலாளர் சுமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்