தமிழக செய்திகள்

சென்னை மாநகராட்சி சார்பில் சொத்து வரி உயர்வு நோட்டீஸ் விநியோகம்

இதுவரை 6 லட்சம் பேருக்கு சொத்து வரி உயர்வு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடுகள், வணிக கட்டிடங்களுக்கு சொத்து வரி கடந்த ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மாநகராட்சி மன்றமும் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து சொத்து வரி உயர்வு நடைமுறைக்கு வந்தது.

மேலும் ஒவ்வொரு வீடுகளுக்கும் உயர்த்தப்பட்ட சொத்து வரி எவ்வளவு என்ற விவரத்துடன் ஏற்கனவே வசூலிக்கப்பட்ட சொத்து வரி விவரமும் அடங்கிய நோட்டீஸ் வருவாய் துறை மூலம் வினியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் இறுதியில் தொடங்கிய இந்த பணி இந்த மாதம் வரை நடக்கிறது. சொத்தின் உரிமையாளர்களுக்கு தபால் மூலம் அனுப்பப்படுகிறது.

இதுவரையில் 6 லட்சம் பேருக்கு சொத்து வரி உயர்வு நேட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில், "சென்னையில் 13 லட்சம் சொத்து வரி உரிமையாளர்கள் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் மேலும் 2 லட்சம் பேருக்கு நோட்டீஸ் வினியோகிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு