தமிழக செய்திகள்

மாணவ-மாணவிகளுக்கு மரக்கன்று வினியோகம்

மாணவ-மாணவிகளுக்கு மரக்கன்று வினியோகம்

தினத்தந்தி

நெகமம்

கிணத்துக்கடவு அருகே வீட்டுக்கு ஒரு பசுமை காவலரை உருவாக்கும் வகையில் பனப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தலா ஒரு மரக்கன்று வழங்கும் விழா, பனப்பட்டி அரசு உயர்நிலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சுமார் 500 மரக்கன்றுகளை பள்ளி தலைமை ஆசிரியர் கதிர்வேல், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கார்த்திகேயன் வேலுச்சாமி ஆகியோர் மாணவ-மாணவிகளுக்கு தலா ஒரு மரக்கன்று வீதம் வழங்கினர். இதில் மா, கொய்யா, சப்போட்டா, மாதுளை உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் இருந்தன. மேலும் அவற்றை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்