தமிழக செய்திகள்

வட்டார சுகாதார பேரவை கூட்டம்

தலைஞாயிறு வட்டார சுகாதார பேரவை கூட்டம்

தினத்தந்தி

வாய்மேடு:

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் தலைஞாயிறு வட்டார சுகாதார பேரவை கூட்டம், ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளையராஜா வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, வட்டார மருத்துவ அலுவலர் சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பொது சுகாதாரம், நோய் தடுப்புகள், கர்ப்பிணி தாய்மார்கள் ஆலோசனை, மகப்பேறு மருத்துவம், பள்ளி சிறார் மருத்துவம், மக்களை தேடி மருத்துவம், வரும்முன் காப்போம், புகையிலை தடுப்பு, அயோடின் பரிசோதனை, குடிநீரில் குளோரின் போன்ற எண்ணற்ற மருத்துவ சேவைகள் குறித்து கூட்டத்தில் பேசப்பட்டது. இதில் ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி, மாவட்ட கவுன்சிலர் இளவரசி, ஊராட்சி மன்ற தலைவர்கள் வெங்கடாசலம், சாந்தி, கற்பகம்நீலமேகம் மற்றும் டாக்டர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்