தமிழக செய்திகள்

மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி

கரூரில் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

தினத்தந்தி

ஸ்கேட்டிங் போட்டி

கரூர் மாவட்ட ரோளார் ஸ்கேட்டிங் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி கரூரில் நடைபெற்றது. 6,8,10,12 வயதிற்கு உட்பட்டோருக்கு தனித்தனி பிரிவாக நடைபெற்றது. இதில் கரூர் மாவட்டம் முழுவதில் இருந்து சுமார் 120 மாணவ-மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

போட்டியை கரூர் மாவட்ட விளையாட்டு வளர்ச்சிக் கழக தலைவர் வீரதிருப்பதி தொடங்கி வைத்தார்.

மாநில போட்டிக்கு தகுதி

இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் நவம்பர் மாதம் பொள்ளாச்சியில் நடைபெறும் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்கேட்டிங் சங்க தலைவர் அசோக் சங்கர், செயலாளர் மைக்கேல் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் பொருளாளர் கார்த்திக் நன்றி கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்