தமிழக செய்திகள்

மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி

பெரம்பலூர் மாவட்ட வாலிபால் சங்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட வாலிபால் சங்கத்தின் சார்பில் ஆண்கள், பெண்களுக்கான மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி பெரம்பலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. போட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தொடங்கி வைத்தார். இதில் மாவட்டத்தில் இருந்து பள்ளி, கல்லூரி, கிளப் அணிகள் என மொத்தம் 42 அணிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடின. ஆண்கள், பெண்களுக்கான போட்டிகள் தனித்தனியாக நடந்தன. போட்டி இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. போட்டியில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு சுழற்கோப்பைகளும், பரிசு தொகையும், வீரர்-வீராங்கனைகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன. மேலும் முதலிடம் பிடித்த அணிகள் மண்டல அளவிலான போட்டிகளில் விளையாடவுள்ளன. போட்டிக்கான ஏற்பாடுகளை சங்கத்தின் மாவட்ட தலைவர் பரமேஷ்குமார், புரவலர் டாக்டர் செங்குட்டுவன், செயலாளர் அதியமான், பொருளாளர் ஊட்டி செல்லப்பிள்ளை உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு