தமிழக செய்திகள்

மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்

திண்டுக்கல்லில் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் நடந்தது.

தினத்தந்தி

திண்டுக்கல் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் பொன்ராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மாவட்ட ஊராட்சி அலுவலக வரவு-செலவு கணக்குகள் குறித்தும், ஊராட்சி பகுதிகளில் செயல்படுத்த வேண்டிய வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் விவாதம் நடந்தது. மேலும் மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கான அமர்வு படி, தினப்படி, நிலையான பயணப்படி வழங்குவதற்கான ஒப்புதல் அளிப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து