சென்னை,
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஜூலை 9-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஜூலை 9-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறும். இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல், சசிகலா ஆடியோ விவகாரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.