தமிழக செய்திகள்

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் விவரம் வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 5,967 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,85,352 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 6,127 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3.25 லட்சமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 53,282 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,689 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முழு விவரம்:-

அரியலூர் - 52

செங்கல்பட்டு - 306

சென்னை - 1278

கோவை - 387

கடலூர் - 370

தர்மபுரி - 8

திண்டுக்கல் - 132

ஈரோடு - 189

கள்ளக்குறிச்சி - 56

காஞ்சிபுரம் - 226

கன்னியாகுமரி - 149

கரூர் - 23

கிருஷ்ணகிரி - 59

மதுரை - 72

நாகை - 63

நாமக்கல் - 59

நீலகிரி - 75

பெரம்பலூர் - 26

புதுக்கோட்டை - 187

ராமநாதபுரம் - 30

ராணிப்பேட்டை - 121

சேலம் - 273

சிவகங்கை - 47

தென்காசி - 94

தஞ்சாவூர் - 119

தேனி - 193

திருப்பத்தூர் - 56

திருவள்ளூர் - 320

திருவண்ணாமலை - 143

திருவாரூர் - 11

தூத்துக்குடி - 98

திருநெல்வேலி - 77

திருப்பூர் - 76

திருச்சி - 104

வேலூர் - 157

விழுப்புரம் - 150

விருதுநகர் - 56 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.