தமிழக செய்திகள்

தீபாவளி பண்டிகை:10 ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (16751/16752) நவம்பர் 4-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை கூடுதலாக ஒரு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்படுகிறது.

சென்னை,

தீபாவளி பண்டிகையையொட்டி, 10 ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை சென்டிரல் - கோவை

சென்னை சென்டிரல் - கோவை இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண் 12243/12244) நவம்பர் 6, 7, 9, 11 ஆகிய தேதிகளில் கூடுதலாக ஒரு முன்பதிவு இருக்கை பெட்டி இணைக்கப்படுகிறது.

தாம்பரம் - கொல்லம்

அதேபோல், தாம்பரம் - கொல்லம் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (16101/16102) நவம்பர் 5-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை கூடுதலாக ஒரு முன்பதிவு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்படுகிறது.

மேலும், தஞ்சாவூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (16866) நவம்பர் 4-ந் தேதி (இன்று) 11-ந் தேதி வரை கூடுதலாக ஒரு முன்பதிவு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்படுகிறது.

சென்னை எழும்பூர் - கொல்லம்

சென்னை எழும்பூர் - கொல்லம் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (20635/20636) நவம்பர் 5-ந் தேதி முதல் நவம்பர் 13-ந் தேதி வரை கூடுதலாக ஒரு முன்பதிவு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்படுகிறது.

எழும்பூரில் இருந்து தஞ்சாவூர்

சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (16865) நவம்பர் 7-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை கூடுதலாக ஒரு முன்பதிவு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்படுகிறது.

சென்னை எழும்பூர் - மங்களூரு

சென்னை எழும்பூர் - மங்களூரு சென்டிரல் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (16159/16160) நவம்பர் 4-ந் தேதி (இன்று) 9-ந் தேதி வரை கூடுதலாக ஒரு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்படுகிறது.

தாம்பரம் - ராமேஸ்வரம்

தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (16103/16104) நவம்பர் 4-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை கூடுதலாக ஒரு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்படுகிறது.

சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம்

சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (16751/16752) நவம்பர் 4-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை கூடுதலாக ஒரு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்படுகிறது.

சென்னை சென்டிரல் - ஆலப்புழா

சென்னை சென்டிரல் - ஆலப்புழா இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (22639/22640) நவம்பர் 5-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை கூடுதலாக ஒரு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்படுகிறது.

சென்னை சென்டிரல் - மைசூரு

சென்னை சென்டிரல் - மைசூரு இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (12007/12008) நவம்பர் 10 மற்றும் 11-ந் தேதிகளில் கூடுதலாக ஒரு முன்பதிவு இருக்கை வசதி பெட்டி இணைக்கப்படுகிறது.

ராமேஸ்வரம் - திருப்பதி

ராமேஸ்வரம் - திருப்பதி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (16780/16779) நவம்பர் 6 முதல் 9-ந் தேதி வரை கூடுதலாக ஒரு தூங்கும் வசதி பெட்டி இணைக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT