தமிழக செய்திகள்

தீபாவளி பண்டிகை: புத்தாடை, பட்டாசு, இனிப்புகள் வாங்க கடைவீதிகளில் குவிந்த மக்கள்...!

தீபாவளி பண்டிகை நாளை வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தீபாவளி பண்டிகை நாளை வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியை முன்னிட்டு மூன்று நாட்கள் (இன்று, நாளை மற்றும் திங்கட்கிழமை) தொடர் விடுமுறை வருகிறது.

தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் இவை மூன்றும் பிரதானமாக உள்ளது. இந்நிலையில் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான புத்தாடை, பட்டாசு, இனிப்புகள் வாங்க கடைகளுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

சென்னை தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள பட்டாசு சந்தையில் பட்டாசுகள் வாங்க பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்தனர். அங்கு புதுப்புது ரகங்களில் இருந்த பட்டாசுகளை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி சென்றனர். மேலும் புது ஆடைகள் மற்றும் இனிப்பு வகைகள் வாங்க பொதுமக்கள் கடைவீதிகளில் குவிந்த வண்ணம் உள்ளனர். 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்