தமிழக செய்திகள்

தீபாவளி பண்டிகை: நவம்பர் 9-ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (நவம்பர்) 12-ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் வெளியூர்களில் வேலை செய்யும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வர். எனவே அவர்கள் எந்தவித சிரமமும் இன்றி சென்று வர சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு அறிவிக்கும், அதன் படி இந்த ஆண்டுக்கான சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பு  28 ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அறிவித்து இருந்தது.

அதன்படி எத்தனை சிறப்புப் பேருந்துகளை, எந்தெந்த ஊர்களுக்கு இயக்குவது என்பது தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் இன்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டம் முடிந்த பின்னர் போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் நவம்பர் 9-ம் தேதி முதல் இயக்கப்படும். இதில்  சென்னையில் இருந்து இயக்கப்படும் 6,300 வழக்கமான பேருந்துகளுடன், கூடுதலாக 4,675 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 10,975 பேருந்துகள் இயக்கப்படும். மேலும் தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை திரும்ப ஏதுவாக நவம்பர் 13-ம் தேதி முதல் பேருந்துகள் இயக்கப்படும், என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டைக்கும், தாம்பரம் மெப்ஸ் பஸ் ஸ்டாண்டில் இருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக தஞ்சாவூருக்கும், மற்ற ஊர்களுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு