தமிழக செய்திகள்

தீபாவளி ஸ்பெஷல்: பெங்களூரு - தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில் - முன்பதிவு தொடக்கம்

பெங்களூரு கன்டோன்மெண்ட்டில் இருந்து நவம்பர் 6-ந் தேதி இரவு 9.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் மதியம் 12.30 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும்.

சென்னை,

தீபாவளி பண்டிகையையொட்டி, பெங்களூரு - தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதற்கான முன்பதிவும் தொடங்கிவிட்டது.

இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

பெங்களூரு - தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில்

பெங்களூரு கன்டோன்மெண்ட்டில் இருந்து நவம்பர் 6-ந் தேதி இரவு 9.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06533) மறுநாள் மதியம் 12.30 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும். மறுமார்க்கத்தில், தூத்துக்குடியில் இருந்து நவம்பர் 7-ந் தேதி மதியம் 3.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06534) மறுநாள் காலை 5.30 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்டை சென்றடையும்.

முன்பதிவு தொடக்கம்

20 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில், தமிழ்நாட்டில் ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி மேலூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT