தமிழக செய்திகள்

ரஜினி அரசியலுக்கு வருவதால் தேமுதிகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை: விஜயகாந்த்

ரஜினி அரசியலுக்கு வருவதால் தேமுதிகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,

கீழடி அகழாய்வு முகாமை தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா நேரில் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜயகாந்த் கூறியதாவது:- தமிழகத்தில் ஆட்சி கலைந்து விரைவில் பொதுத்தேர்தல் வரும்; தமிழகத்தில் பாரதிய ஜனதா காலூன்ற முடியாது. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினி அரசியலுக்கு வருவதால் தேமுதிகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றார்.