தமிழக செய்திகள்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமுடன் உள்ளார்: சென்னை விமான நிலையத்தில் பிரேமலதா பேட்டி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமுடன் உள்ளார் என்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

சென்னை,

அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று சென்னை திரும்பினார். தேமுதிக கட்சி தலைவரும், தமிழகத்தின் முன்னாள் எதிர்கட்சி தலைவருமான விஜயகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு சென்றார். இந்நிலையில் விஜயகாந்த் அமெரிக்காவிலிருந்து இன்று அதிகாலை சென்னை சாவதேச விமான நிலையம் வந்தடைந்தார்.

அதிகாலை சென்னை திரும்பினாலும், 10 மணி நேரத்திற்கு பிறகே விமான நிலையத்தை விட்டு விஜயகாந்த் வெளியே வந்தார். பேட்டரி காரில் வந்த விஜயகாந்த் தொண்டர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தார். விஜயகாந்தை வரவேற்க விமான நிலையத்தில் குவிந்து இருந்த தேமுதிக தொண்டர்களும், அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரேமலதா, அதிகாலை 3 மணிக்கு வந்தோம். பயண களைப்பால் சிறிது நேரம் விஜயகாந்த் ஓய்வு எடுத்தார். விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் விஜயகாந்த் அறிவிப்பார். கூட்டணிக்கு நாங்கள் முயற்சிக்கவில்லை. பல கட்சிகள் எங்களுடன் பேசிக்கொண்டு இருக்கின்றன என்றார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்