தமிழக செய்திகள்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக துபாய் பயணம்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக விமானம் மூலம் இன்று துபாய் புறப்பட்டு சென்றார்.

சென்னை,

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கு கடந்த சில வருடங்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர், அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொண்டார். பின்னர் அவர் சென்னை திரும்பினார். அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்படுவதால் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக அவர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கு அவர் அமெரிக்கா செல்வதாக தகவல் வெளியானது. ஆனால், அதிகாலை விமானத்தில் அவர் பயணிக்கவில்லை.

இந்த நிலையில், விஜயகாந்த் சென்னை விமான நிலையத்திற்கு சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார். அவர், இன்று காலை துபாய்க்கு புறப்பட்டு சென்றார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு