தமிழக செய்திகள்

தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்

சங்கரன்கோவிலில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது

தினத்தந்தி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் தங்கவேலு, சீனிவாசன், பரமகுரு, தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் சரவணன், மாநில வர்த்தகர் அணி இணை செயலாளர் முத்துசெல்வி, மாவட்ட துணைச் செயலாளர்கள் மனோகரன், ராஜதுரை, புனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ் வரவேற்றார்.

இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார். அவர் பேசுகையில், "தென்காசி மாவட்டத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை தரும் தமிழக முதல்-அமைச்சரை சிறப்பாக வரவேற்க வேண்டும், பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை தலைமை கழகம் அறிவித்தது போல சிறப்பாக நடத்த வேண்டும், பூத் கமிட்டி அமைக்கும் பணியை வருகிற 20-ந் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் லாலா சங்கரபாண்டியன், கடற்கரை, பெரியதுரை மதிமாரிமுத்து, ராமச்சந்திரன், வெற்றிவிஜயன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் வெள்ளத்துரை, புளியங்குடி நகர செயலாளர் அந்தோணிசாமி, நகராட்சி தலைவர்கள் உமா மகேஸ்வரி, விஜயா, பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை