தமிழக செய்திகள்

தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி வரும் பொதுத்தேர்தலிலும் தொடரும்; திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி

தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி வரும் பொதுத்தேர்தலிலும் தொடரும் என திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டியளித்து உள்ளார்.

நெல்லை,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான திருநாவுக்கரசர் எம்.பி. நெல்லையில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், தமிழகம் ஊழல் மிகுந்த மாநிலமாக திகழ்கிறது.

பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் ஒரே தலைவர் ராகுல் காந்தி. அவர் விரைவில் காங்கிரஸ் கட்சியின் தலைவராவார் என கூறினார். தமிழகத்தில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் நாடாளுமன்ற மக்களவை தேர்தலை ஒரே அணியில் நின்று சந்தித்தன. அதனுடன் சேர்த்து நடத்தப்பட்ட சட்டமன்ற இடைத்தேர்தலிலும் கூட்டணி கட்சிகளாக இருந்து போட்டியிட்டன.

இதுபற்றி அவர் கூறும்பொழுது, தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி வரும் பொதுத்தேர்தலிலும் தொடரும் என்று கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்