தமிழக செய்திகள்

தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்

பெருந்தோட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

தினத்தந்தி

திருவெண்காடு:

திருவெண்காடு அருகே பெருந்தோட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் மோகனா ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர்கள் விஸ்வநாதன், அகோரம், குமார்,கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு தலைவர் முத்தமிழ் வரவேற்றார். இதில் சீர்காழி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான பஞ்சு குமார் கலந்து கொண்டு கூட்டுறவு சங்க உறுப்பினர் சேர்க்கை, வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி, கோவில்களில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நியமனம் உள்ளிட்டவைகள் குறித்து பேசினார். கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதி கோபி, மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு துணை அமைப்பாளர் மகேந்திரன், மங்கை மடம் கருணாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் மன்சூர் அலி நன்றி கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து