கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

எடப்பாடி நகராட்சியை முதல் முறையாக கைப்பற்றிய திமுக.!

மொத்தம் உள்ள 30 வார்டுகளில் 16 வார்டுகளை திமுக கைப்பற்றியுள்ளது.

தினத்தந்தி

சேலம்,

தமிழகம் முழுவதும் கடந்த 19-ஆம் தேதி, 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில் பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தங்களது வெற்றியை பதிவு செய்து கொண்டாடிவருகின்றனர். இந்த நிலையில், முன்னாள் முதல் அமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த ஊரான எடப்பாடி நகராட்சியில் திமுக முதல் முறையாக கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

அங்கு மொத்தம் உள்ள 30 வார்டுகளில் 16 வார்டுகளை திமுக வெற்றிபெற்றுள்ளது. 13 வார்டுகளில் அதிமுக வெற்றிபெற்றுள்ளது. எடப்பாடி நகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளதால், திமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்