தமிழக செய்திகள்

கோபாலபுரத்தில் கூடியுள்ள தொண்டர்கள் கலைந்து செல்ல திமுக தலைமை வேண்டுகோள்

கோபாலபுரத்தில் கூடியுள்ள தொண்டர்கள் கலைந்து செல்லுமாறு திமுக தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது. #Karunanidhi

தினத்தந்தி

சென்னை,

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு காவிரி ஆஸ்பத்திரியில் கருணாநிதி சிகிச்சை மேற்கொண்டார். அப்போது அவரது தொண்டை பகுதியில் பொருத்தப்பட்டிருந்த டிரக்யாஸ்டமி செயற்கை சுவாச குழாய் மாற்றப்பட்டது.

இந்நிலையில், வயது மூப்பின் காரணமாக திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலத்தில் நலிவு ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் திமுக தலைவர் கருணாநிதியை பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அறிந்த திமுக கட்சித் தொண்டர்கள் கோபாலபுரம் இல்லத்தின் முன் குவிந்தனர். நள்ளிரவைத் தாண்டியும் தொண்டர்கள் அங்கே குவிந்த வண்ணம் இருந்தனர். இதனையடுத்து கோபாலபுரத்தில் கருணாநிதியின் வீட்டின் முன் கூடியுள்ள தொண்டர்கள் அனைவரும் கலைந்து செல்லுமாறு திமுக தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது