ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை மற்றும் அம்மாநிலத்தில் பழங்குடியின பெண்களை நிர்வாணமாக அழைத்துச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், இதனை தடுக்கத்தவறிய, நடவடிக்கை எடுக்காத மத்திய பா.ஜ.க. அரசு மற்றும் மணிப்பூர் மாநில அரசை கண்டித்தும் நேற்று தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. மகளிர் அணியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்த வகையில் விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணியின் சார்பில் நேற்று காலை விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார்.
கண்டன கோஷம்
மகளிர் அணி மாநில பிரசாரக்குழு செயலாளர் தேன்மொழி, மாவட்ட துணை செயலாளர் கற்பகம், ஒன்றிய செயலாளர்கள் மைதிலிராஜேந்திரன், பிரேமாஅல்போன்ஸ், மாவட்ட மகளிர் அணி தலைவர் செல்வி, துணைத்தலைவர் சாந்தி, தொண்டரணி தலைவர் பிரான்சிஸ்மேரி, துணை அமைப்பாளர் ராஜேஸ்வரி, சமூகவலைதள பொறுப்பாளர் பிரியங்கா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஆயிரக்கணக்கான மகளிர்கள் கலந்துகொண்டு மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து கோஷமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் அன்னியூர் சிவா, மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் புஷ்பராஜ், நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்விபிரபு, வளவனூர் பேரூராட்சி தலைவர் மீனாட்சிஜீவா, ஒன்றியக்குழு தலைவர்கள் அஞ்சுகம்கணேசன், கலைச்செல்வி, சங்கீதஅரசி, தனலட்சுமி, உஷாமுரளி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
திண்டிவனம்
திண்டிவனம் வண்டிமேடு வ.உ.சி. திடலில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. மகளிரணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநில மகளிர் ஆணைய குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சீதாபதி சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சைதை சாதிக் கலந்து கொண்டு மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், அமைச்சர் செஞ்சி மஸ்தான் மனைவி சைதானி பீவி, சாந்தி உட்பட மகளிரணி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.