தமிழக செய்திகள்

தொகுதி பங்கீடு தொடர்பாக வி.சி.க.வுடன் 12-ந்தேதி தி.மு.க. பேச்சுவார்த்தை - அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

தேர்தலை முன்னிட்டு தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் தி.மு.க. பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சியினர் தீவிரமாக தயாராகி வருகின்றனர். கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன.

அந்த வகையில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான தி.மு.க.-ம.தி.மு.க. இடையேயான தொகுதி பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், தொகுதி பங்கீடு தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் வரும் 12-ந்தேதி தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவித்தார். மேலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு திரும்பியவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு