சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், வரும் பிப்ரவரி 23-ந்தேதி முதல் 'வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற பெயரில் வீடு வீடாக சென்ற பரப்புரையை தொடங்க வேண்டும் என தி.மு.க. மகளிர் அணியினருக்கு கட்சி தலைமை அறிவுறுத்தி உள்ளது. இந்த பரப்புரைக்கான தொகுதி வாரியான பயிற்சி கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 22-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த சூழலில், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், சட்டமன்ற தேர்தல் குறித்தும், 'வெல்லும் தமிழ் பெண்கள்' தேர்தல் பரப்புரை குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.