தமிழக செய்திகள்

நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் - காணொலி வாயிலாக நடக்கிறது

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்.பி.க்கள்-எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வழியாக நாளை நடைபெறுகிறது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு இன்று மாலை வெளியானது. அதன்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 22-ந்தேதி நடக்கிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து, திமுகவின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 27-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 6 மணியளவில் காணொலி காட்சி வழியாக நடைபெறும். இதில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்