தமிழக செய்திகள்

தி.மு.க. தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு: கவர்ச்சிகர அறிவிப்புகள் இடம் பெறுகிறது

164 பேர் அடங்கிய திமுக வேட்பாளர்களின் பட்டியலை மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.

சென்னை,

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30-ஆம் தேதி தொடங்கி ஏப்.6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியும், அதிமுக தலைமையில் தேசியஜனநாயகக் கூட்டணியும் தேர்தலில் களம் காண்கின்றன.இவை தவிர நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகளும் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகின்றன.

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ் - 28, மதிமுக-4, மமக - 2, கொமதேக -2, ஐயூஎம்எல் 2, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 5 தொகுதிகள், விடுதலைச் சிறுத்தைகள் 8, தேமுதிக 10 தொகுதிகளிலும் களம்காண்கின்றன. இந்த நிலையில் 164 பேர் அடங்கிய திமுக வேட்பாளர்களின் பட்டியலை மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். இதைத்தொடர்ந்து திமுகவின் தேர்தல் அறிக்கையை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிக்கை வெளியிடுகிறார். திமுக தேர்தல் அறிக்கையில் கவர்ச்சிக அறிவிப்புகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்​தில் அதி​முக ஆட்​சிக்கு வந்​தால், அரிசி ரேஷன் கார்​டுக்கு இலவச பிரிட்​ஜ், குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம், ஆண்​டுக்கு 3 காஸ் சிலிண்​டர் இலவசம் உட்பட பல திட்டங்களை எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.