தமிழக செய்திகள்

திமுக நிர்வாகிகள் கூட்டம் தேதி மாற்றம் - பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

திமுகவின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

திமுக அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 24-ம் தேதி நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார். இந்நிலையில் இக்கூட்டத்தின் தேதி மாற்றப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பொதுச்செயலாளர் துறைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 28-12-2022 (புதன்கிழமை) காலை 10 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம்,"கலைஞர் அரங்கத்தில்' நடைபெறும்.

அதுபோது அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து