தமிழக செய்திகள்

தி.மு.க. கவுன்சிலரின் கணவருக்கு மருத்துவ சிகிச்சை நிதி உதவி

சுரண்டையில் தி.மு.க. கவுன்சிலரின் கணவருக்கு மருத்துவ சிகிச்சைக்கு தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் நிதி உதவி வழங்கினார்.

தினத்தந்தி

சுரண்டை:

சுரண்டை நகராட்சி 24-வது வார்டு கவுன்சிலர் சிவசண்முக ஞான லட்சுமி. இவரது கணவர் அழகுதுரை என்ற அய்யப்பன். இவர் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று தற்போது சுரண்டையில் உள்ள வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்நிலையில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன், கவுன்சிலரின் கணவர் அழகுதுரையை சந்தித்து மருத்துவ சிகிச்சைக்காக தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தனது சொந்த நிதியாக ரூ.30 ஆயிரத்தை வழங்கினார். அப்போது கவுன்சிலர்கள் பரமசிவன், வைகை கணேசன், அன்னபிரகாசம், ஜேம்ஸ், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் குறுங்காவனம் வெள்ளத்துரை பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்