தமிழக செய்திகள்

துப்பாக்கிச்சூடு: பேரவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர திமுக சார்பில் நோட்டீஸ்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பேரவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர திமுக சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

பரபரப்பான சூழலில் தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுவதற்காக தமிழக சட்டசபை இன்று கூடுகிறது. ஜூலை 9-ந் தேதி வரை மொத்தம் 23 நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத் தொடர் தினமும் காலை 10 மணிக்கு தொடங்க இருக்கிறது. ஒவ்வொரு நாளும் முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

ஸ்டெர்லைட் விவகாரம் மற்றும் அது தொடர்பான போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட பிரச்சினைகளால் தமிழக சட்டப்பேரவையில் இன்று அனல் பறக்கும் என தெரிகிறது. சட்டப்பேரவை கூட உள்ளதையொட்டி, தலைமைசெயலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த சூழலில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக பேரவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர திமுக சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை விதி 56-ன் படி ஸ்டெர்லைட் விவகாரம், துப்பாக்கிச்சூடு ஆகியவற்றை பற்றி நாள் முழுவதும் விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கோரி ஸ்டாலின் நோட்டீஸ் கொடுத்துள்ளார். இதற்கிடையே, சட்டப்பேரவைக்கு ஸ்டாலின் உட்பட திமுக உறுப்பினர்கள் கருப்புச்சட்டையில் வருகை தந்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது