தமிழக செய்திகள்

'தமிழகத்தின் உரிமைகளை தி.மு.க. ஒவ்வொன்றாக விட்டுக்கொடுத்தது' - தமிழிசை சவுந்தரராஜன்

தமிழகத்தின் உரிமைகளை தி.மு.க. ஒவ்வொன்றாக விட்டுக்கொடுத்தது என தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

சென்னை,

சென்னை விமான நிலையத்தில் பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"தி.மு.க. அரசு கச்சத்தீவை தாரை வார்த்தது. முல்லைப் பெரியாறு அணை விவகாரம் மற்றும் காவிரி விவகாரத்தில் தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளால் தமிழகத்தின் உரிமை பாதிக்கப்படுகிறது. நீட் தேர்வு பற்றி முதன்முதலில் பேசும்போது தி.மு.க.தான் ஆட்சியில் இருந்தது.

அதே போல் டங்ஸ்டன் சுரங்கம், ஹைட்ரோகார்பன் திட்டம் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் தமிழகத்தின் உரிமைகளை தி.மு.க. ஒவ்வொன்றாக விட்டுக்கொடுத்தது."

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.