தமிழக செய்திகள்

திமுக தலைவர், பொருளாளர் தேர்தல் தொடர்பாக ஆக.28-ல் பொதுக்குழு கூட்டம்: திமுக அறிவிப்பு

திமுக பொதுக்குழு கூட்டம் ஸ்டாலின் தலைமையில் ஆக.28-ல் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது. #DMK

தினத்தந்தி

சென்னை,

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு அக்கட்சியின் செயற்குழு கூட்டம்

கடந்த 14 ஆம் தேதி நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் சாதனைகளை பட்டியலிட்டு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், திமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் ஆகஸ்ட் 28 (செவ்வாய்க்கிழமை) ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் காலை 9 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறும் என்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கூட்டத்தில், தலைவர், பொருளாளர் தேர்தல், தணிக்கை குழு அறிக்கை ஆகியவை பற்றிய ஆலோசனை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை