வேலூர்,
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வருகிறார். கட்சி பொதுக்கூட்டங்களில் துரைமுருகன் தொடர்ந்து பங்கேற்று வந்தாலும், அவ்வபோது மருத்துவமனையில் உடல்நிலை பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், இன்று மீண்டும் உடல்நலக்குறைவு காரணமாக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைகள் குறித்த முழு விவரங்களை மருத்துவமனை நிர்வாகம் விரைவில் வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.