சென்னை,
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் காட்பாடி தொகுதியில் போட்டியிட்டார். தேர்தலுக்கான பிரச்சாரத்தில் தீவிரமாக இருந்த அவருக்கு, கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். துரைமுருகனின் உடல்நிலை குறித்து மருத்துவமனை தரப்பில் தினமும் அறிக்கையும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் துரைமுருகன், சிகிச்சைக்குப் பின்னர் இன்று குணமடைந்தார். இதனால் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.