தமிழக செய்திகள்

சிலிண்டருக்கு ரூ.100 மானியத்தை தி.மு.க. அரசு வழங்க வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்

தமர் மோடி விலையை ஏற்றக் கூடாது என்று முயற்சி செய்து வைத்திருந்தார் என அண்ணாமலை தெரிவித்தார்

பொள்ளாச்சி,

பொள்ளாச்சியில் பா.ஜனதா முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது,

ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் போரின் காரணமாக சமையல் எரிவாயு விலை உயர்ந்து உள்ளது. இந்தியாவில் எல்.பி.ஜி. இணைப்புகள் வெறும் 14 கோடி மட்டும் இருந்தது. ஆனால் கடந்த 11 ஆண்டுகளில் 33 கோடி யாக உயர்த்தப்பட்டு உள்ளது. பயன்பாடு அதிகமாக இருப்பதால் 45 சதவீ தம் கியாஸ் மட்டும் இறக்குமதி செய்யப்படுகிறது. பிரதமர் மோடி விலையை ஏற்றக் கூடாது என்று முயற்சி செய்து வைத்திருந்தார்.

ஆனால் சர்வதேச சந்தையில் விலை உயரும்போது, வேறு வழி இல்லாமல் விலையை ஏற்ற வேண்டியுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர் தல் வாக்குறுதியாக அளித்த கியாஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியத்தை கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. தற்போது சர்வதேச அளவில் விலை உயர்ந்து உள்ளது. எனவே ரூ.100 மானியத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.