சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மக்கள் கிராம சபை கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றி வருகிறார். வருகிற 7-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை தர்மபுரி, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை, மதுரை, தேனி மற்றும் சென்னை மாவட்டங்களில் என 7 மாவட்டங்களில் 7 மக்கள் கிராம சபை கூட்டங்களில் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
7-ந் தேதி காலையில் தர்மபுரி மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட பாலக்கோடு சட்டமன்ற தொகுதியிலும், மாலையில் சேலம் மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட எடப்பாடி சட்டமன்ற தொகுதியிலும், 8-ந் தேதி காலையில் நாமக்கல் மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியிலும், மாலையில் புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதியிலும் நடைபெறும் மக்கள் கிராம சபை கூட்டங்களில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
இதேபோல 9-ந் தேதி காலையில் மதுரை தெற்கு மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியிலும், மாலையில் தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியிலும், 10-ந் தேதி காலையில் சென்னை வடக்கு மாவட்டம் ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் மக்கள் கிராம சபை கூட்டங்களில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
மேற்கண்ட தகவல் தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.