தமிழக செய்திகள்

விக்கிரவாண்டியில் தி.மு.க முன்னிலை: இனிப்பு வழங்கிய முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின்

அண்ணா அறிவாலயம் வந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அங்கு திரண்டிருந்த தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

தினத்தந்தி

சென்னை,

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதில் துவக்கம் முதலே தி.மு.க முன்னிலையில் உள்ளது. இதில் 8வது சுற்று நிலவரப்படி தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவா 51,567 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

தி.மு.க தொடர்ந்து முன்னிலை பெற்று வருவதால் அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விக்கிரவாண்டி தொகுதியில் பல்வேறு இடங்களில் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தி.மு.க-வினர் கொண்டாடி வருகிறார்கள். அதேபோல அண்ணா அறிவாலயத்திலும் தி.மு.கவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தி.மு.க தொடர்ந்து முன்னிலை பெற்று வருவதை அடுத்து அண்ணா அறிவாலயம் வந்த தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அங்கு திரண்டிருந்த தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து