தமிழக செய்திகள்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 12ம் தேதி தொடங்குகிறது. தேர்தல் முடிவுகள் மே 2-ம் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை உறுதி செய்து ஒதுக்கி கொடுப்பதில் திமுக. ஆர்வம் காட்டி வருகிறது. இதனிடையே திமுகவில் விருப்ப மனு அளிக்க இன்றே கடைசி நாள் என்ற நிலையில் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.

இதன்படி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் அமைப்புச்செயலாளார் ஆர்.எஸ்.பாரதியிடம் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்பமனுவை வழங்கினார்.

1984ஆம் ஆண்டு முதல் தேர்தலில் போட்டியிட்டு வரும் ஸ்டாலின் 9ஆவது முறையாக போட்டியிடுகிறார். ஏற்கனவே கொளத்தூர் தொகுதியில் 2 முறை போட்டியிட்டு வென்ற மு.க.ஸ்டாலின் தற்போது 3வது முறையாக அங்கு போட்டியிட உள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து