தமிழக செய்திகள்

சமஸ்கிருத செய்தி தொகுப்பு குறித்த உத்தரவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

சமஸ்கிருத செய்தி தொகுப்பை பொதிகை மற்றும் பிற மாநில மொழி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப உத்தரவிட்டிருப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

சமஸ்கிருத செய்தி தொகுப்பை நாள்தோறும் பொதிகை மற்றும் பிற மாநில மொழி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப தூர்தர்ஷன் மண்டல தொலைக்காட்சி நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்தியில் பா.ஜ.க. அரசு ஆட்சிக்கு வந்த நாளிலிருந்தே இந்தி - சமஸ்கிருத திணிப்பை மட்டுமே மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியாவில் 15 ஆயிரம் பேரால் மட்டுமே பேசப்படும், வழக்கொழிந்த சமஸ்கிருத மொழியிலான செய்தி அறிக்கையை தமிழ் மற்றும் பிற மொழி பேசும் மக்களிடம் திட்டமிட்டு திணிப்பது, தகவல் தொழில்நுட்பத்தின் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்ற பகிரங்க பண்பாட்டு படையெடுப்பாகும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் சமஸ்கிருத திணிப்பை திரும்பப் பெறாவிட்டால் உடைய போவது மத்தியில் ஆட்சி செய்வோரின் ஆணவப் போக்கும், அதிகார மமதையும்தான் என ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்