தமிழக செய்திகள்

சென்னை ஆழ்வார்பேட்டையில் ஞானதேசிகன் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சென்னை ஆழ்வார்பேட்டையில் ஞானதேசிகன் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்

தினத்தந்தி

சென்னை

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவராக இருந்தவர் ஞானதேசிகன்( 71). தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராகவும் இருந்து வந்தார். 2011 முதல் 2014-ம் ஆண்டு வரை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பு வகித்த ஞானதேசிகன், மாநிலங்களவையின் உறுப்பினராக இருமுறை பதவி வகித்துள்ளார்.

இந்த நிலையில் உடல்நல பாதிப்பு காரணமாக கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஞானதேசிகன் நேற்று சென்னையில் காலைமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அவரது உடல் சென்னை ஆழ்வார்பேட்டைக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் கட்சியினர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் ஞானதேசிகன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்