தமிழக செய்திகள்

தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்

காவல்கிணறில் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது.

தினத்தந்தி

வள்ளியூர் (தெற்கு):

நெல்லை கிழக்கு மாவட்டம் வள்ளியூர் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆய்வுக்கூட்டம் காவல்கிணறில் நடந்தது. வள்ளியூர் யூனியன் தலைவரும், தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான சேவியர் செல்வராஜா தலைமை தாங்கினார். நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன் கலந்து கொண்டு, வாக்குச்சாவடி முகவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கி பேசினார்.

கூட்டத்தில், மாவட்ட அவைத்தலைவர் வள்ளியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கிரகாம்பெல், மாவட்ட பொருளாளர் ஜார்ஜ் கோசல், மாவட்ட துணை செயலாளர் நம்பி, ஒன்றிய கவுன்சிலர்கள் கொசிஜின், பாண்டித்துரை, மகாலட்சுமி, அஜந்தா, அனிதா, ஒன்றிய அவைத்தலைவர் வேலு, துணை செயலாளர் இளங்கோவன் மற்றும் கிளை செயலாளர்கள், வாக்குச்சாவடி முகவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்