சென்னை,
தமிழக சட்டமன்ற கூட்டம் வருகிற 5-ந் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த நிலையில், அன்றைய தினம் மாலையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு தலைமை கொறடா கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வருகிற 5-ந் தேதி மாலை 6 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயம், 'கலைஞர் அரங்கில்' நடைபெறுகிறது. இதில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் " என்று கூறப்பட்டுள்ளது.