தமிழக செய்திகள்

கொரோனா தடுப்பு பணிக்கு ஒரு மாதம் சம்பளத்தை வழங்கும் திமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள்

திமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் தங்கள் ஒரு மாத சம்பளத்தை கொரோனா தடுப்பு பணிக்கு வழங்குவார்கள் என முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு பணிகளுக்காகவும், மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவதற்காகவும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது நேரடியாக முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதி மூலமாகவோ நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அந்த அடிப்படையில் திமுக அறக்கட்டளை சார்பில் ஒரு கோடி ரூபாய், நிவாரண நிதி வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் ஒரு மாத சம்பளத்தை முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என தமிழக முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது